களங்கமின்மையின் பொலிவு : தக்ஷிலா ஸ்வர்ணமாலி
தக்ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதை ‘பொட்டு’ ஆக்காட்டி இதழில் ‘ரிஷான் ஷெரீப்’ மொழிபெயர்ப்பில் வெளிவந்த போது, அதனைப் படித்துவிட்டு தர்மு பிரசாத்துடன் சிறுகதை வடிவம் சார்ந்து நிறைய உரையாடியதாக நினைவு. நவீனத்துவ எழுத்தாளர்களுக்கு இருக்கக்கூடிய பிசிரில்லாத கூர்மையான மொழிநடை மட்டுமன்றி, யதார்த்தவாத கதை சொல்லலில், அதீத சித்தரிப்பு நோக்கிச்செல்லும் போது நிகழும் அடர்த்தி குறைப்பு சார்ந்து, பொட்டு சிறுகதையூடாக தொலை தூரம் யோசிக்க முடிந்தது. அக்கதையின் கச்சிதம் அப்படி. வடிவக் கச்சிதம் கொடுக்கக்கூடிய கலையமைதிக்கும், கட்டற்ற சித்தரிப்பில் நிகழும்… Read More »