மாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்!
‘சாதியத்தின் இயல்பாக்கமும் டொமினிக் ஜீவாவின் அச்சமும்’ என்று ராகவன் எழுதிய கட்டுரையில், என்னைப் பற்றி எழுதிய குறிப்புக்கு விளக்கம் எழுதலாம் என்று அக்கட்டுரையின் பின்னூட்டப் பெட்டியைத் தேடினால் அதனைக் காணவில்லை. அதனால் எனது வலைத்தளத்தில் பதிவிடுகிறேன். ராகவன் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு, முரளி சண்முகவேலனை ‘அறிவாக, நுணுக்கமாகப் பேசுகிறீர்கள் அதனால் பிராமணரா?’ என்று நான் கேட்டேன் என்பது. இதனை முற்றாக மறுக்கிறேன். 2018 டிசம்பர் 08 அன்று “பரியேறும் பெருமாள்” திரைப்படம் சார்ந்து ‘தமிழ் மொழிச் செயற்பாட்டகம்’ ஒழுங்கமைத்த நிகழ்வின் போது முரளி சண்முகவேலன் ‘மையமாகும் விளிம்புகள்’ என்ற தலைப்பில் பேசவந்தார். இந்தக் கூட்டத்தில் சபையில்… Read More »