“அவள் அப்படித்தான்” திரைப்படமும் பெண்களின் மீதான கழிவிரக்கமும்.
“அவள் அப்படித்தான்” திரைப்படம் நேற்று(06.05.2017) நிகழ்படம் நிகழ்வில் திரையிடப்பட்டது. பார்க்க வேண்டிய திரைப்படப் பட்டியலில் வைத்திருந்த இப்படத்தை ஒருவகையாகப் பார்த்தாகிவிட்டது. நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகளுக்குச் சிந்தனை வடிவில்,எழுத்து வடிவில் முன்வைக்கப்படும் தீர்வுகளுக்கு அல்லது சிந்தனை...