செவ்வந்திப்பூ: அனோஜனின் கட்டுடைப்பு -லலித்தாகோபன்
கலைமுகம் எழுபத்து மூன்றாவது இதழ் கிட்டியிருக்கிறது. இதில் அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்களினால் எழுதப்பட்ட ‘செவ்வந்திப்பூ’ சிறுகதையினை படித்தேன்.ஏற்கனவே அனோஜன் அவர்களின் கதைகள் பலவற்றை இணையம் மற்றும் இலக்கிய இதழ்களில் படித்திருக்கிறேன். அவர் நல்லதோர் கதைசொல்லி.அனேகமான அவரின் கதைகளில் வரும் மரமொன்றில் “சிக்மென்ட் ப்ராயிட்” பதுங்கியிருப்பார்.அவரை கண்டு பிடித்து விளையாடும் கள்ளன் -பொலிஸ் விளையாட்டுக்களாக இந்த கதைகள் இருக்கும். முதலில் அனோஜனுக்கு நன்றி சொல்லணும். இதுவரையில் நான் செவ்வந்தி என நினைத்தது நம்மவூர் செம்பரத்தை பூவினையே.ஆக அது வேறு… Read More »