இத்தனை காலம் கடந்து அவனை சந்திப்பேன் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் முகம் மட்டுமே எனக்கு மங்கலாக நினைவில் இருந்தது. ஜெயந்தனை கண்டவுடன் புதையுண்டிருந்த அவனின் முகம் ஞாபக அடுக்களில் இருந்து ஓர் அலைபோல்...
நாம் முன்நோக்கிச் செல்ல கிடைக்கும் வாய்ப்புக்களைச் சாதூர்யமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போது ஏறக்குறைய இன்னொருவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. ஒன்றை ஒன்று தள்ளி முன்னே நகர்வதுதான் வாழ்வின் நகர்வியக்கமாக இருக்கின்றது. உள்ளிருந்து செயற்படுத்தும் விசையும்...
உணவு,உடை,உறையுள் மூன்றும்தான் மனித வாழ்க்கையின் தொடர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கின்றது. இது தனியே மனிதர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றில்லை, மிருகங்களுக்கும் இதே உணவு,உறையுள் தான் உயிர்வாழத் தேவைப்படுகின்றன. அப்போது மனிதர்களுக்கும், மிருகத்துக்கும் என்ன வேறுபாடு...
‘ஜூட்‘ சிறுகதை பற்றி ‘பிரிந்தன்’ எழுதிய மதிப்பீடு. சிறுகதைகள் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி பல இடங்களில் பலரால் முன்வைக்கபடுவதை அறிந்திருக்கிறேன். இதற்கு பல காரணங்களும் பதிலளிக்கபடுகின்றன. அதிலே முக்கியமான ஒன்று வேற்று...
மிகுந்த சிக்கலும், புதிரும், எதிர்பாராத திருப்பங்களும் நிகழும் வாழ்க்கையின் நகர்வின் தடுமாற்றத்தில் சிக்கியிருக்கும் போது, மனதுக்கு நெருக்கமானவர்களின் அணுக்கம் காரணமாகப் பல இடங்களில் வாழ்கையின் தருணங்கள் அழகாகத் தோன்றுகின்றன. வெட்டி எடுக்கப்பட்ட ஐஸ் துண்டை...
கோவம் எழும் உந்துதல் கணம் சட்டென்று பெரும் விசையுடன் எழும்போது சுற்றியிருக்கும் அணைத்துத் தற்காலச் சூழலும் மறந்துபோகும். எமக்கு மிகப்பிடித்தவர்களைக் கூட மிகுந்த கோவத்துடன் எம் நிலை மறந்து சில இடங்களில் வசைச் சொற்களால்...
நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கவேண்டும் என்றே விரும்புவோம். அவை பிழைக்கும் போது கடுமையான மனச்சோர்வு சுற்றிப்பிடிக்கும். இந்த அழுத்தங்களில் இருந்து வெளியேற உள்மனம், முன்னம் எடுத்த முடிவு ஏன் பிழைத்தது? நான்...
வெவ்வேறு நேர இக்கட்டுகளில், சமநிலை குலைந்திருக்கும் சமயத்தில் ஏற்படும் அழுத்தத்தில் எழும் பயங்கள் மிக எளிமையான காரணங்களில் உருவாகியவைகாய இருக்கும், அவ்வாறான அழுத்தங்கள் கரைந்து போனபின் இப்படியெல்லாம் சிந்தித்து பயந்தோமா என்று நகைச்சுவையாகவே திரும்பத்...
சிறுவயதில் என்னவாக ஆக விரும்பினேன் என்று எனக்குள்ளே நான் கேட்கும் போது ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொன்றை விரும்பியிருந்தது நினைவுகளில் வருகின்றது. இருந்தும் ஏதோவொரு லட்சியம் ஆழமானதாக மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்துவிடுகிறது. வழி தவறியோ...
அறங்களாக வகுத்துக்கொண்டதை மீறும் போது ஏற்படும் குற்றவுணர்வின் இடைஞ்சல்களைக் களைவது ஒரு சவால்தான். மீறல்களை எவ்வளவு விரைவாக நிகழ்த்த முனைந்தாலும் குற்றவுணர்வு வேகத்தடையை ஏற்படுத்தும். இந்தக் குற்றவுணர்வு என்பது வகுத்துக்கொண்ட அறங்களை நம்புவதிலும் பின்பற்றுவதிலுமுள்ள...