கோட்டை – மு.தளையசிங்கம் – 05
அறங்களாக வகுத்துக்கொண்டதை மீறும் போது ஏற்படும் குற்றவுணர்வின் இடைஞ்சல்களைக் களைவது ஒரு சவால்தான். மீறல்களை எவ்வளவு விரைவாக நிகழ்த்த முனைந்தாலும் குற்றவுணர்வு வேகத்தடையை ஏற்படுத்தும். இந்தக் குற்றவுணர்வு என்பது வகுத்துக்கொண்ட அறங்களை நம்புவதிலும் பின்பற்றுவதிலுமுள்ள...