அஞ்சலி: தெளிவத்தை ஜோசப் (1934–2022)
தெளிவத்தை ஜோசப் அவர்களைக் குளிர் நிரம்பி வீசிய பின்னேரப் பொழுதொன்றில் மலையகத்தில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்பில் முதன்முதலாகச் சந்தித்திருந்தேன். தன் வெண்ணிறத் தலைமுடியைச் சீராக அழுத்தி வாரி, கன்னங்களைச் சவரம் செய்து, மீசையைக் கச்சிதமாக நறுக்கிவிட்டுச் சட்டையை உட்செலுத்திய நேர்த்தியான தோற்றத்தில் சுறுசுறுப்பாகப் பேசியவாறு இருந்தார். அன்றைய நாளில் அவர் தலைமைதாங்கிய அரங்கில் உரையாற்றச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. முன்னர், அவர் எழுதிய ‘குடைநிழல்’ குறுநாவலை வாசித்துவிட்டு விரிவான குறிப்பொன்று எழுதியிருந்தேன்; அதையொட்டி அவருடன் தொலைபேசியில் பேசவும் இயன்றது.… Read More »