ஆதிரை – ஒரு பக்கப் பெண்களின் கண்ணீர்
ஈழத்து நாவல்களில் என்ன விசேடமாக இருந்துவிடப்போகின்றது என்ற பிரக்ஞை பெரும்பாலானோர்க்கு இருப்பதுண்டு. ஓலம் ஒப்பாரி கண்ணீர் மீண்டும் மீண்டும் மரணம் என்றே பேசிக்கொண்டிருக்கும். ஈழம் வலிகளினாலும் ஓலத்தினாலும் நிரம்பியது. நாம் சந்தித்த கண்ணீர் முடிவற்றது. கொடுத்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டமுடியாத பிரமாண்டமானவை. இவற்றின் தரவுகளும் வலிகளும் எம்மிடம் ஏராளம் உண்டு. கடந்து வந்த வாழ்க்கையினை ஏதோவொரு விதத்தில் பதித்து வரலாற்றில் ஒப்பேற்றிவிட மனம் விரும்பிக்கொண்டிருக்கும். இவற்றைக் கட்டுரைகளாக எழுதுவதிலும் பார்க்க கதை சொல்லலாக சொல்வதிலே அதிகமான தரப்பினரிடம்… Read More »