Give it to Angkar

இரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று லஷ்மி மணிவண்ணன் அறிவித்திருந்த நாளில் லஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவலை வாசித்து முடித்திருந்தேன். நாவல் கொடுத்த கனதியான மனநிலையில் லஷ்மி மணிவண்ணனின் அந்தக் கூற்று கொமோரா நாவலில் அர்த்தம் நிரம்பியதாக ஒரு கணம் பட்டும் மறைந்தது. தமிழில் எழுதப்படும் ஒரு தொகுதி நாவல்கள் சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தின் நுனியைக் கூடத் தீண்டாமல் முடிந்துவிடும் எளிய வாழ்க்கைச் சித்திரிப்புகளுடன் மாத்திரம் இருக்கின்றன. நாவல்களில் தமக்கான தனியான… Read More »

ஒரு கோப்பை காபி

“ஒரு கோப்பை காபி” சிறுகதை விகடன் இதழில் வாசித்தேன். இந்த வருடம் முடியும் தருவாயில் ஏதோவொரு மூலையில் சோர்வுகள் ஆட்கொள்ளச் சுருங்கியிருந்த சமயம் இக்கதை மிகப்பெரிய மனத் திறப்பைத் தந்தது. இக்கதை பற்றியே நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். மிக நேரடியாகக் கதை ஆரம்பிக்கிறது. எளிமையான சித்தரிப்பு. ஒரு வேகமான வாசிப்பில் ஒரு கோப்பியை ஆறவிடமுன் குடிப்பதுபோல சடாறென்று முடித்துவிடலாம். ஆனால், இதன் ஆழம் மிகமிக அதிகமானது. பல்வேறு சுழிப்புகளும் சிடுக்குகளும் கொண்டது. தன்னை வலிமையானவனாக நினைத்துக்கொள்ளும் ஆண்… Read More »

தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17

எனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைகளை அங்கும் இங்குமங்குமாக வாசித்ததுண்டு. சிறுகதை வடிவத்தைக் கூர்மையாகப் பிரயோகித்த ஒருவராகவே அவர் எனக்குத் தெரிகிறார். மூன்றாம் சிலுவை என்கிற அவரது நாவல் என்னை அதிகம் கவரவில்லை. அலை இதழ் இரண்டை மீண்டும் தட்டிப் பார்க்கும்போது “தொலைவில் தெரியும்… Read More »

ஒளிர் நிழல் – சுரேஷ் பிரதீப்

தன்னை குழந்தையென கற்பனை செய்து கொள்ளும் தன்மையை நிறைய பெண்களிடம் பார்க்க முடிகிறது. அவர்களின் ஊசலாட்டங்களை கத்தரித்து “நீ ஒரு பெண். நிச்சயம் குழந்தை கிடையாது” சொல்ல வேண்டும் என எண்ணினேன். ஆனால் மாலினி இப்போது அந்த குழந்தைத்தனத்துக்கு அங்கீகாரம் எதிர்பார்க்கிறாள். இது சுரேஷ் பிரதீபின் “மையல்” சிறுகதையில் வரும் விவரணை ஒன்று. இந்த நுணுக்கமான அவதானம் ஒன்று போதும். சுரேஷின் கூர்மையான அவதானங்களைக் காட்ட. பெரும்பாலான பெண்கள் அணிந்துகொள்ளும் ஒரு புனைவு உடல் மொழி இந்தக்… Read More »

மூன்று புத்தகங்கள்

1 அம்பரய – மென்னலையில் மிதக்கும் பூமி சிங்கள இலக்கியம் பற்றிய புரிதல்கள் பொதுவாகத் தமிழர்களாகிய நமக்கு அதிகம் இருப்பதில்லை. குறிப்பிட்ட வெகுசிலரைத் தவிரப் பெரும்பாலான இலங்கை தமிழ் இலக்கிய வாசகர்களிடம் குறைந்தபட்ச சிங்கள இலக்கியம் பற்றிய சமகாலத் புரிதல் இருப்பதில்லை (என்னையும் சேர்த்து). சிங்கள மொழியை வாசித்துப் புரிந்துகொள்பவர்கள் எம் மத்தியில் மிகச்சொற்பம் என்பது அதற்குரிய மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். எனினும் ஆங்கிலத்தின் ஊடக அங்கு நிகழும் அசைவியக்கத்தை ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்க இயலும். உசுல.பி.விஜய சூரிய… Read More »

நியோகா

நியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. மலரின்… Read More »

மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம் – வன்முறையின் முட்கள்

யதார்த்தனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம்’. தொண்ணூறுகளுக்குப்பின் பிறந்து எழுத ஆரம்பித்த தலைமுறையைச் சேர்ந்தவர் யதார்த்தன். யதார்த்தன் தன் சிறுவயது பிராயத்திலிருந்து பதின்ம வயது இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வாழ்ந்தவர். இறுதியுத்தத்தின் விளிம்புவரை சென்று மீண்டு முகாம் வாழ்க்கையைக் கழித்து, தற்போது பல்கலைக்கழக மாணவராக இருக்கிறார். இணைய வெளியில் எழுத ஆரம்பித்துப் படிப்படியாக இலங்கை சிற்றிதழ் சூழலுக்குள் வந்தவர். ஆரம்பத்தில் கவிதை உருவாக்கத்தில் ஈடுபட்டு பிற்பாடு கதைகள் எழுதுவதில் அதிகநேரத்தை செலவழிக்க… Read More »

மெல்லுணர்வு – நோயல் நடேசன் – 16

அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற சிறுகதைதான். இக்கதை யாழ்… Read More »

மதிப்பீடு – திருக்கோவில் கவியுகன் – 15

இருத்தலின் மீதான வெறுப்பு, வாழ்தலின் மீதான வெறுப்பு போன்றவை அகம் நோக்கிய சிந்தனையில் உதிப்பதாக இருக்கலாம். அது தன்னுடையை தனிப்பட்ட வாழ்வின் மீதான போக்கு அல்லது மற்றவர்களின் வாழ்கையின் துன்பத்தை அவதானிக்கும்போது வாழ்வின் பிடிப்பு மீது தோன்றும் வெறுப்புணர்வாக இருக்கும். இது ஏன் சிலருக்கு அதிகமாகத் தோன்றுகின்றது, சிலருக்குத் தோன்றுவதேயில்லை என்ற கேள்வி எழலாம், ஆனால் பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் இதை உணர்ந்து இருப்பதே மெய்யாக இருக்கும். கடைசி மெல்லிய ஏக்கத்துடன் இவ்வகையான உணர்வுளைக் கடந்திருப்போம்.… Read More »

மக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம்.ஹனீபா – 14

பேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை மானுட வாழ்கையில் மைய சுழற்சியில் விசையாக அதுவே இருப்பது போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதன் அத்தனை சாத்தியங்களையும் கலைகள் கேள்விக்கு உட்படுத்தி விவாதிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. கிழக்கிலங்கையைச் சேர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.எல்.எம்.ஹனீபா எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதையாக “மக்கத்துச் சால்வை” சிறுகதையைக் குறிப்பிடுவேன். 1991-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சிறுகதை இன்றும் அதே பரவசத்தைத்… Read More »