“ஒரு கோப்பை காபி” சிறுகதை விகடன் இதழில் வாசித்தேன். இந்த வருடம் முடியும் தருவாயில் ஏதோவொரு மூலையில் சோர்வுகள் ஆட்கொள்ளச் சுருங்கியிருந்த சமயம் இக்கதை மிகப்பெரிய மனத் திறப்பைத் தந்தது. இக்கதை பற்றியே நாள்...
எனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே...
தன்னை குழந்தையென கற்பனை செய்து கொள்ளும் தன்மையை நிறைய பெண்களிடம் பார்க்க முடிகிறது. அவர்களின் ஊசலாட்டங்களை கத்தரித்து “நீ ஒரு பெண். நிச்சயம் குழந்தை கிடையாது” சொல்ல வேண்டும் என எண்ணினேன். ஆனால் மாலினி...
யதார்த்தனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம்’. தொண்ணூறுகளுக்குப்பின் பிறந்து எழுத ஆரம்பித்த தலைமுறையைச் சேர்ந்தவர் யதார்த்தன். யதார்த்தன் தன் சிறுவயது பிராயத்திலிருந்து பதின்ம வயது இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்...
அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும்....
இருத்தலின் மீதான வெறுப்பு, வாழ்தலின் மீதான வெறுப்பு போன்றவை அகம் நோக்கிய சிந்தனையில் உதிப்பதாக இருக்கலாம். அது தன்னுடையை தனிப்பட்ட வாழ்வின் மீதான போக்கு அல்லது மற்றவர்களின் வாழ்கையின் துன்பத்தை அவதானிக்கும்போது வாழ்வின் பிடிப்பு...
பேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை மானுட வாழ்கையில் மைய சுழற்சியில் விசையாக அதுவே இருப்பது போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதன்...
குற்றவுணர்வுகளில் வீழ்வதும் அதிலிருந்து வெளியேறத் தவிப்பதும் மனித வாழ்கையில் சகஜமான ஒன்றுதான். ஆனால், சுற்றிப்பிடிக்கும் குற்றவுணர்வுகளின் வீரியத்திற்கு ஏற்ப அதன் பாதிப்புகள் தொடரலாம். எனினும் குற்றவுணர்வு பிடிக்கப்பட்டவரின் மனதின் பலவீனம் அதன் விளிம்பு எல்லைகளை...
எஸ்.பொவின் படைபுகலம் அகம் சார்ந்த நெருக்கடிகளைப் புறவயமான சித்தரிப்புகளுடன் சித்தரிப்பவை. காமம் சார்ந்த மன நுண்ணடுக்குகளில் ஒளிந்திருக்கும் அடியாழப் பிரச்சினைகளைத் தொட்டு எழுதுவதிலே எஸ்.பொ முனைப்பாக இருந்தார். தனிமனித பிரச்சினைகளும், அகச் சிக்கல்களுக்குமே பிரதான...
நாம் முன்நோக்கிச் செல்ல கிடைக்கும் வாய்ப்புக்களைச் சாதூர்யமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போது ஏறக்குறைய இன்னொருவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. ஒன்றை ஒன்று தள்ளி முன்னே நகர்வதுதான் வாழ்வின் நகர்வியக்கமாக இருக்கின்றது. உள்ளிருந்து செயற்படுத்தும் விசையும்...